திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'அமரன்' படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்திற்கு எஸ்கே23 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகின்ற நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். 

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. சமீபத்தில், சிவகார்த்திகேயனின் 24-வது படம் குறித்த தகவல் வெளியானது. அதன்படி, இப்படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் அடித்த 'டான்' படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sivakarthikeyan swami dharisanam in thiruchenthur murugan temple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->