பஞ்சாப் முதல்வர் இல்லத்தில் பணப் பட்டுவாடா; அதிரடி ரெய்டு நடத்திய அதிகாரிகள்; சூடுபிடிக்கும் டெல்லி தேர்தல்..! - Seithipunal
Seithipunal


வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் இல்லத்தில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.  

டில்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 05-ஆம் தேதி நடைபெற உள்ளது. டெல்லியில் ஆம்ஆத்மி, பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறது. 

இந்நிலையில், டில்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் கபூர்தலா இல்லத்தில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி அதிரடி சோதனை நடத்தியுள்ளதாக கூறியுள்ளனர். இதனால், அவரது இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டில்லி முதல்வர் அதிஷிக்கு ஆதரவாக, பஞ்சாப் முதல்வர் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்த சூழலில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்து அதிஷி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியதாவது: பா.ஜ.,வினர் பட்டப்பகலில் பணம், காலணிகள், பெட்ஷீட்களை விநியோகிக்கிறார்கள். அது தெரியவில்லை. மாறாக, முதல்வரின் இல்லத்திற்குச் சென்று அதிகாரிகள் சோதனை நடத்துகிறார்கள். இதற்கு பிப்ரவரி 05ஆம் தேதி டில்லி மக்கள் பா.ஜ.,வுக்கு பதில் அளிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், இது குறித்து பஞ்சாப் முதல்வர் கூறியதாவது: டில்லிக்குள் பா.ஜ.,வினர் வெளிப்படையாக பணம் விநியோகம் செய்கிறார்கள். ஆனால் டில்லி போலீசாரும், தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் எதையும் கண்டுகொள்வதில்லை. 

இதற்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. பா.ஜ.,வின் உத்தரவின் பேரில் டில்லியில் உள்ள எனது இல்லத்தில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர் எனக் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Officials conducted a raid at the residence of Punjab Chief Minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->