நாவில் எச்சில் ஊற வைக்கும் கம்பு பால் பாயாசம்..!
how to prepare kambu milk payasam
தானிய வகைகளில் ஒன்றான கம்பை வைத்து அதன் பாலில் பாயாசம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
*கம்பு
பசும்பால்
வெல்லம்
ஏலக்காய் தூள்
சுக்குத்தூள்
நெய்
முந்திரி
திராட்சை
உப்பு
செய்முறை:-
முதலில் கம்பை எட்டு மணி நேரம் ஊற வைத்து அந்தத் தண்ணீர் வடிகட்டி நன்றாக முளை கட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கம்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வடிகட்டியை பயன்படுத்தி கம்பின் பாலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நெய் ஊற்றி சூடானதும் அதில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அரைத்து வைத்த கம்பு பாலை அதில் ஊற்றி நன்றாக கிண்ட வேண்டும். கம்புப்பால் நன்கு கொதித்து சற்று கெட்டியாக மாறும் சமயத்தில் காய்ச்சிய பசும்பாலை அதில் ஊற்றி நன்றாக கலந்து கொதிக்க விட வேண்டும்.
மற்றொரு அடுப்பில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்திருந்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கரைசலை கெட்டியாக ஆன கம்புப்பாலில் நன்றாக கலந்து உப்பு, ஏலக்காய் தூள், சுக்குத்தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இதையடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய்யை ஊற்றி முந்திரி, திராட்சை போன்றவற்றை போட்டு வறுத்து பாயாசத்தில் ஊற்றி கலந்தால் சுவையான கம்பு பால் பாயாசம் தயார்.
English Summary
how to prepare kambu milk payasam