தள்ளிப்போன கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ஒரு சரித்திர படமாக உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து, 'கங்குவா' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படமாக உருவாகியுள்ள 'வேட்டையன்' திரைப்படமும் வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் 'வேட்டையன்' படத்திற்காக 'கங்குவா' படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்படுவதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்.

இந்தத் தகவலை நடிகர் சூர்யா கோவையில் நடைபெற்ற 'மெய்யழகன்' பட இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படத்திற்காக 'கங்குவா' படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது.

மூத்தவர், சினிமாவின் அடையாளம், 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார் என்பதால் ரஜினிகாந்த் படத்திற்கு வழிவிடுவோம். 'கங்குவா' ஒரு குழந்தை. அதை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். 'கங்குவா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor surya announce kanguva movie release date postpond


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->