சினிமாவில் நல்ல விஷயங்களை விட கெட்டது அதிகம் - நடிகர் வடிவேலு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' 2-ம் பாகத்தில் நடிக்க மறுத்ததால் அவருக்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பல வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவருக்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பின. 

இந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிந்ததைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இதைத் தொடர்ந்து 'மாமன்னன்' படத்தில் நடித்த வடிவேலுக்கு பாராட்டுகள் கிடைத்தன.

இந்த நிலையில், சினிமா அனுபவங்கள் குறித்து நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பேசிய நடிகர் வடிவேலு- சினிமா வாழ்க்கையில் நடிகர் ராஜ்கிரனை தெய்வமாக கருதுகிறேன். அவர்தான் எனக்குள் இருக்கும் திறமையை அறிந்து படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். சினிமாவில் நல்ல விஷயங்களை விட கெட்டது அதிகம் இருக்கிறது. நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டேன்.

கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி. இதை கமல்ஹாசனிடம் சொன்னபோது, இதுமாதிரி நிறைய வரும். அதை தாண்டி நடித்து முன்னேற வேண்டும் என்றார். நான் மீண்டும் நடிக்க வந்ததும் என்னை விமர்சனம் செய்தவர்கள் யாரையும் காணவில்லை. தொழிலை நேசித்து செய்தால் தோற்க மாட்டோம்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vadivel speech in live programme


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->