நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண விழாவில் நடிகர் விஜய்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
Actor Vijay at Keerthy Suresh wedding Photos going viral on the internet
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை 15 ஆண்டுகளாக காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்துகொண்டனர்.இந்த திருமண நிகழ்வில் நடிகர் விஜய் கலந்துகொண்டார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக வலன் வருபவர் கீர்த்தி சுரேஷ். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைதொடர்ந்து தமிழில் "ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன்" .மற்றும் 'நடிகையர் திலகம்' படத்தில் நடித்து கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாக பாராட்டை பெற்றார். மேலும் அந்த படத்திற்கு தேசிய விருது வென்றார்.
இதற்கிடையே, கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை 15 ஆண்டுகளாக காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்துகொண்டனர்.
இத்திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் விஜய் உள்பட நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
English Summary
Actor Vijay at Keerthy Suresh wedding Photos going viral on the internet