#BREAKING || நடிகர் விக்ரமுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானது.! - Seithipunal
Seithipunal


பிரபல தமிழ் நடிகர் விக்ரமுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவ்வப்போது திரை நட்சத்திரங்களும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்படும் போது, அந்த திரைப்பிரபலங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்று குறித்து, தங்கள் ரசிகர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அக்கறையுடன், அவர்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரமுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவல் உறுதியாகியுள்ளது.

அவருக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்த காரணத்தினால், அவர் செய்த பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா நோய்த்தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறார். 

முன்னதாக நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ACTOR VIKRAM AFFECTED CORONA 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->