நடிகர் விக்ரமின் 'தங்கலான்' பட நியூ லுக்! - Seithipunal
Seithipunal


பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம் 'தங்கலான்'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலத்தில் முடிவடைந்தது. 

இதில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். 

தமிழர்கள் கோலார் தங்க சுரங்கத்தில் அனுபவித்த துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டுள்ளது. 

இந்நிலையில் தனது புதிய தோற்றத்தை நடிகர் விக்ரம், சமூக வலைதளவக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், அவரது உதவி இயக்குனர் இயக்ககும் படத்திற்காக இதுபோன்ற தோற்றத்தில் விக்ரம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படப்பிடிப்பு முடித்து ரஜினியின் படத்திற்காக ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் விக்ரமின் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது கருத்துக்களை அவர் அவர் பாணியில் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vikram new look


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->