''வீர தீர சூரன்'' நிறைவு பெற்ற முதல்கட்ட படப்பிடிப்பு! அப்டேட் கொடுத்த விக்ரம்.! - Seithipunal
Seithipunal


அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 62 ஆவது திரைப்படமான ''வீர தீர சூரன்'' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

எஸ்.ஜே. சூர்யா, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

ஹெச்.ஆர். பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தின் டீசர் நடிகர் விக்ரமின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் நடிகர் விக்ரம், ''வீர தீர சூரன்'' திரைப்படத்தின் முதல் கட்ட பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவித்து 'உங்கள் அன்பிற்கு என்றும் நான் அடிமை' என சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'தங்கலான்' திரைப்படம் நிறைவடைந்த நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor Vikram Veera Dheera Sooran movie update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->