நடிகர் விக்ரம், விஜய் சேதுபதியுடன் இணையும் ராஷ்மிகா மந்தனா! இயக்குநர் யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


பிரபல மலையாள இயக்குநர் நடிகர் விக்ரம், விஜய் சேதுபதி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரை வைத்து படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

'2018' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மலையாள திரையுலகில் 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்தத் படத்தை இயக்கிய ஜுட் அந்தோணி ஜோசப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். 

தற்போது இவர் தமிழ் நட்சத்திரங்களை வைத்து திரைப்படம் இயக்க திட்டமிட்டுள்ளதால், அதற்காக நடிகர் விக்ரம், விஜய் சேதுபதி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் பேசு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

படத்தில் நடிப்பது குறித்து ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று இருப்பதாகவும், நடிகர்கள் உறுதியளித்ததும், இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என இயக்குநர் ஜோசப் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஜூட் அந்தோணி ஜோசப், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து திரைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vikram Vijay Sethupathi join Rashmika


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->