கதை, திரைக்கதை, வசனத்தோடு தடம் பதிக்கும் யோகி பாபு..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தடம் பதித்து, பல்வேறு கதாபாத்திரங்களில் பயணித்து வருபவர் யோகிபாபு. அந்த வகையில் தற்போது இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்திலும், ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கல்' உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

அமீர் நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான 'யோகி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமான யோகிபாபு தொடர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

தன் டைமிங் காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்த யோகிபாபு பின்பு கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். இதனை தொடர்ந்து தற்போது புது அவதாரம் எடுத்துள்ள யோகிபாபுவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   

இதற்கிடையே பிக்பாஸ் ஓவியா, 'காண்டிராக்டர் நேசமணி' மற்றும் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து 'லோக்கல் சரக்கு' உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் யோகிபாபு, ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி அதில் கதாநாயகனாகவும் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. 'வில் அம்பு' படத்தை இயக்கிய ரமேஷ் சுப்பிரமணியம் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor yogi babu writing in new movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->