புடவையை இழுத்து சொருகிக்கொண்டு.. களத்தில் குதித்த நடிகை அஞ்சலி.!
actress anjali playing cricket in saree
கடந்த தமிழில் 2007-ஆம் ஆண்டு வெளியாகிய 'கற்றது தமிழ்' என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. அடுத்தது அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் என்று நடித்து அனைவருக்கும் பிடித்த நடிகையாக அஞ்சலி அடையாளம் காணப்பட்டார்.
அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு சினிமாவிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், ஒரு கட்டத்தில் அவரது உடல் எடை அதிகமாகிவிட்டதால் மற்றும் புது ஹீரோயின்களின் வருகையால் என்று பட வாய்ப்புகள் குறைந்தன. பட வாய்ப்புகளை பெற தற்போது அவர் கடுமையான உடற்பயிற்சிகள் செய்து தனது உடல் எடையை குறைத்து விட்டார்.
இயக்குனர் ராம் இயக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' என்ற படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து அஞ்சலி நடித்து வருகிறார். இத்தகைய நிலையில், நடிகை அஞ்சலி புடவை அணிந்து கொண்டு கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
actress anjali playing cricket in saree