தவெக 2வது ஆண்டு தொடக்க விழாவில் இயக்குனர் வெற்றிமாறன்! தொண்டர்கள் உற்சாகம்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக்கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவினை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவின் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், அழகர் கோவில் சாலையில் மாத்தூர் விளக்கில் மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது, 

இதில், சிறிய மாடு பெரிய மாடு என இரண்டு பிரிவாக போட்டிகள் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை  மாநகர் மாவட்ட கழக செயலாளர் விஜய் அன்பன் தலைமையில் இந்த போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வெற்றிமாறனுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். 

முன்னதாக, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் கோடியை ஏற்றிய விஜய், கொள்கைத் தலைவர்களின் சிலைகளை திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai TVK Vetrimaran


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->