வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு அறிவுரை!  - Seithipunal
Seithipunal


வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், குழந்தைகள், உயர் ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய், ரத்த சோகை உள்ளவர்கள் மலையேற்ற பயணத்தின் போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும்  பக்தர்கள் தனியாக செல்லாமல் குழுவாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பூண்டி அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் அருள்பாலிக்கிறார். இங்கு அவரை தரிசனம் செய்ய தமிழகம் மட்டு மின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

அதன்படி வெள்ளியங்கிரி மலையேற ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படும். இந்தநிலையில்  இந்த ஆண்டு நேற்று முதல் மே மாதம் 31-ந் தேதி வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து உள்ளது. மேலும் இதையொட்டி மலையேறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

அதன்படி 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், குழந்தைகள், உயர் ரத்த அழுத்தம், இதயம், நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய், ரத்த சோகை உள்ளவர்கள் மலையேற்ற பயணத்தின் போது கவனத்துடன் இருக்க வேண்டும். பக்தர்கள் தனியாக செல்லாமல் குழுவாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர், உணவு, மருந்துபோன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர வேண்டும் என்றும்  மலையேற்ற பகுதிகளில் கடும் குளிர் நிலவுவதால் தேவையான பாதுகாப்பு உடைகளை எடுத்து வர வேண்டும் என்றும்  அடிவாரத்தில் உள்ள முகாமில் மருத்துவ பரிசோதனை செய்த பிறகு மலையேற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் மலையேற்றத்தின் போது தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றுதல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டால் பயணத்தை தொடராமல் உடனடியாக மருத்துவக் குழுவினரை அணுக வேண்டும் என்றும்  மலையேறும் பக்தர்கள், வனப் பகுதியின் சுற்றுச்சூழலை கெடுக்கும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என்று பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுஅறிவுறுத்தப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Guidelines issued. Advice to devotees trekking Velliangiri


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->