ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து தளபதியிடம் கூட சொல்லாமல் வெளியேறிய ஜோதிகா! என்ன காரணம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


படப்பிடிப்பின் போது கதாநாயகனான தளபதி விஜயிடம்  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை சொல்லாமல் ஷூட்டிங்கிலிருந்து வெளியேறிய சம்பவம் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் அட்லி திரைப்படத்தை விஜயை வைத்து இயக்கியிருந்தார்  அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய் 3 கதாபாத்திரங்களில் நடிக்கும் மெர்சல் என்ற திரைப்படத்தை  இயக்கினார். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தத் திரைப்படத்தில் விஜயுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படத்தில் நாம் அறியாத செய்தி ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த செய்திகளின்படி வெற்றிமாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜய்க்கு நித்யா மேனன் ஜோடியாக நடித்திருப்பார். முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு ஜோதிகாவைத்தான் நடிக்க கேட்டிருக்கிறார்கள்.

அவரும் சம்மதித்து படப்பிடிப்பிற்கு வந்து கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாததால் ஒரு சில மாற்றங்களை செய்யும்படி இயக்குனரிடம் கேட்டுள்ளார். இயக்குனர் அதற்கு மறுத்து விடவே படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜயிடம் கூட சொல்லாமல் வெளியேறி இருக்கிறார் ஜோதிகா. மெர்சல் திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இந்த செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress jyothika walked off from mersal shoot becaue of this reason


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->