25 வயதிற்கு மேல் பெண்களுக்கு திருமணம் செய்ய தடை! 30 வயதை எட்டியவுடன் கருப்பை நீக்கம் - அரசியல் கட்சி தலைவரால் அதிர்ச்சியில் உலகம்!  - Seithipunal
Seithipunal


குழந்தை பிறப்பு விகிதம் குறைவதால் உலகின் பல நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன. குறிப்பாக ரஷியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவதால், அதிகப்படுத்துவதற்காக தனி அமைச்சகத்தை உருவாக்க அதிபர் புதின் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.

இதேபோல், ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் மக்கள் திருமண உறவுகளிலும், நீண்டகால உறவுகளிலும் ஆர்வமின்றி இருப்பதாகவும், இதனால் குழந்தை பிறப்பு விகிதம் பெரும் அளவு குறைந்து உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

நம் தென் இந்தியாவில் கூட பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் வலியுறுத்தினார். தமிழகத்தில் கூட இதுகுறித்த விவாதம் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஜப்பானின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் நவோகி ஹைகுடா, 25 வயதிற்குப் பிறகு பெண்களுக்கு திருமணம் செய்ய தடை, 30 வயதை எட்டியவுடன் கருப்பை நீக்கத்தை கட்டாயமாக்கவும் பரிந்துரை செய்து உள்ளார். 

இது அந்நாட்டில் மட்டுமில்லாமல் உலக நாடுகளையே அதிரவைக்கும் செய்தியாக தற்போது மாறியுள்ளது. மேலும், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தி இப்படியா ஆலோசனை தருவது என்று அவருக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன. 

இதனையடுத்து தனது கருத்துக்களுக்கு நவோகி ஹைகுடா மன்னிப்பு தெரிவித்து உள்ளார். மேலும் இதனால் தன்னை யாரும் பெண்களுக்கு எதிரானவர் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் ஜரிகை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan politician viral statement


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->