டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே சுமூக உறவு வேண்டும் - தமிழிசை சவுந்தர்ராஜன்..!
tamilisai soundarrajan speech about dr balaji attack
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவரை கத்தியால் குத்திய விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஒரு தனிப்பட்ட சம்பவமாக நான் பார்க்கவில்லை.
அரசு மருத்துவமனைகளுக்கு ஏழை நோயாளிகள் நம்பிக்கையோடு வருகிறார்கள். மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்பை அரசு சரிசெய்ய வேண்டும். டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையே சுமூகமான உறவு இருக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் புகார் பெட்டிகள் வைக்கலாம். நோயாளிகளின் தேவைகள் குறித்து கேட்டறிந்து அவற்றை சரிசெய்யலாம். எந்த டாக்டரும் பாரபட்சத்தோடு சிகிச்சை அளிப்பது இல்லை. ஆனால் சில நேரங்களில் பிரச்சினைகள் வரும்போது, அது தாக்குதல் அளவிற்கு போகக்கூடாது." என்றுத் தெரிவித்தார்.
English Summary
tamilisai soundarrajan speech about dr balaji attack