பள்ளிக்கல்வித்துறைக்கு தனி பட்ஜெட் - குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்.! - Seithipunal
Seithipunal


சென்னை கொளத்தூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ”அனைத்து மாணவ செல்வங்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள். இதுவரைக்கும் 2,467 கோடி ரூபாய் பள்ளிகளின் வளர்ச்சிக்காக செலவிடப்பட்டுள்ளது. 

மாணவர்கள் அதிகம் அரசு பள்ளிகளில் சேர்வதால் அதற்கு தேவையான கட்டமைப்புகள் தேவைப்படுவதால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் தொடர் முயற்சியால், உழைப்பால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய மாற்றம் நடைபெற்று வருகிறது. 

அதிமுக ஆட்சியில் பள்ளிகளுக்காக எத்தனை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன..? நாங்கள் மட்டுமே பள்ளிக் கல்வித்துறைக்கு இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கீடு செய்துள்ளோம். பள்ளிக்கல்வித்துறைக்கு தனியாக பட்ஜெட் போடும் அளவிற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. 

தனியார் பள்ளியாக இருந்தாலும் சரி, அரசுப் பள்ளியாக இருந்தாலும் சரி. 10 குழந்தைகள் வெளியே செல்லும்போது ஆசிரியர்களும் உடன் செல்ல வேண்டும். பெற்றோர்களின் ஒப்புதல் பெற்று செல்ல வேண்டும். ஆட்சியரின் ஒப்புதலோடுதான் செல்ல வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம். 

மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்தி மாணவர்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். அவர்களது ரகசியங்கள் காக்கப்படும். பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைத்து அவர்கள் அதை மூடி மறைக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister anbil magesh press meet in chennai kolathur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->