அடேங்கப்பா எஜமான் படத்தில் நடிக்கும் போது மீனாவுக்கு வயது இவ்வளவு தானா? ஆச்சரியமா இருக்கே!
actress meena shares about her 40 year long cinema career
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. இவர் அன்புள்ள ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகியவர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எஜமான் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் தன்னை நிலை நிறுத்தியவர். கடந்த ஆண்டு இவரது கணவர் வித்யாசாகர் உடல் நல குறைபாட்டினால் மரணம் அடைந்தார்.
அதன் காரணமாக மிகவும் மன உளைச்சலிலிருந்த மீனாவை அவரது மகளும் தோழிகளும் தான் அந்த மீளா துயரிலிருந்து தேற்றினர். தற்போது அதிலிருந்து வெளியே வந்திருக்கும் மீனா மீண்டும் திரைப்படங்களில் நடிக்கயிருக்கிறார்.
இந்த நேரத்தில் மீனா சினிமாவிற்கு வந்து 40 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் மிகப்பெரிய விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் நடன இயக்குனர் கலா மாஸ்டர். இந்த நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகை தந்து சிறப்பித்தார். அந்த நிகழ்ச்சியின் போது 40 வருட திரைத்துறையில் தன்னுடைய அனுபவங்களையும் மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார் மீனா.
அந்த நிகழ்ச்சியில் பேசிய மீனா எஜமான் படத்தில் நடிக்கும் போது தனக்கு 15 வயது தான் ஆனது என தெரிவித்திருக்கிறார். தன்னுடைய சினிமா வாழ்வின் ஆரம்ப கட்டத்திலேயே சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தனது சினிமா வாழ்வில் மறக்க முடியாத தருணம் எனவும் அந்த நிகழ்வின் போது பகிர்ந்து கொண்டார். அவ்வை சண்முகி படத்தில் உலக நாயகனுடன் நடித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம் எனவும் கூறினார் அவர்.
English Summary
actress meena shares about her 40 year long cinema career