முதல்வராகப் போகும் பிரபல நடிகை.. வெளியான சூப்பர் தகவல்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்தான் நடிகை பிரியாமணி. இவர் திருமணத்திற்கு பின் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் பிரபலமாக நடித்து வருகிறார்.

அதிலும், ஷாருக்கான ஜவான் மற்றும் அஜய் தேவகன் நடிப்பில் உருவாகும் மைதான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கிறார். நாகசெய்தன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்குகின்ற திரைப்படத்தில் பிரியாமணி ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தில் அரசியல் கட்சி தலைவராக பிரியா மணி இருப்பது போலவும் அதில் அவர் முதலமைச்சராக இருப்பது போலும் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் மிக முக்கியம் பெற்றதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

திருமணத்திற்கு பின் பிரியாமணி நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கூட அவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்காத நிலையில் முதல்வராக அவர் நடிக்கக்கூடிய இந்த கதாபாத்திரம் மிகச்சிறந்த கதாபாத்திரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress priyamani cm In Vengat prabhu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->