நடிகை வனிதா மீது தாக்குதல்: பின்னணியில் பிரதீப் ஆண்டனி ஆதரவாளர்? வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மிகவும் பிரபலமானார். 

பின்னர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான 'அநீதி' திரைப்படத்தின் மூலம் வனிதாவின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. 

தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோதிகா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் வலைதளத்தில், ''யாரோ அடையாளம் தெரியாத பிரதீப் ஆண்டனி ஆதரவாளர் கடுமையாக எண்ணி தாக்கினார். 

பிக் பாஸ் சீசன் 7 குறித்து என்னுடைய விமர்சனத்தை முடித்துவிட்டு எனது காரை எடுக்க வந்தேன். எனது தங்கையின் வீட்டிற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எடுக்க வந்த போது அங்கு வந்த மர்மநபர் ரெக்கார்ட் கொடுக்கிறீர்களா என தெரிவித்துக் கொண்டு என்னை தாக்கினார் என பதிவிட்டுள்ளார். 

மேலும், வனிதா விஜயகுமார் தனது அடிபட்ட முகத்தினை பதிவிட்டு பிக் பாஸ் வெறும் பொழுதுபோக்கான விளையாட்டு நிகழ்ச்சி. இது எனக்கு தேவையில்லாதது என குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress Vanitha Attack Pradeep Antony supporter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->