தேசிங்கு பெரியசாமியுடன் இணையப்போவது அஜித் or சிம்பு..? இணையத்தில் வைரலான புகைப்படம்..?
Will Ajith or Simbu be the one to get together with Desingu Periyasamy
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துள்ளார். படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் பட ரிலீஸை தள்ளிவைப்பதாக தயாரிப்பு குழு அறிவித்து விட்டனர்.
இதனால் அஜித் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித் நடித்துள்ளார்.
அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என தொடர்ந்து 02 படங்கள் நடித்து வெளியாகவுள்ள நிலையில் புதிய படம் குறித்து தகவலும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அவர் அடுத்து 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட புகழ் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.அத்துடன் இயக்குனருடன் அஜித்குமார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த படம் பாகுபலி போன்ற கதைக்களத்தை கொண்ட படமாக இருக்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான "பத்து தல" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குநர் மணி ரத்னம் இயக்கியுள்ள "தக் லைஃப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடிப்பதாக பல முறை தகவல்கள் வெளியாகின. பின்னர், குறித்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் கூறப்பட்டது. படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குநர் தேசிங் பெரியசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. அடுத்து இவர்கள் இணைய போறார்களா என்ற எதிர்பார்க்கும் எகிறியுள்ளது.
English Summary
Will Ajith or Simbu be the one to get together with Desingu Periyasamy