பிரபல நடிகர் வீட்டு விசேஷத்தில் ஜோடியாக சுற்றும் நடிகர் சித்தார்த்.! அப்ப இது லவ் தானே.? நெட்டிசன்கள் கேள்வி.!
Adidhi rai With actor sithardh in actor marriage
பிரபல நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த் இருவரும் நடிகர் ஷர்வானந்தின் திருமணத்தில் ஜோடியாக கலந்து கொண்டனர். முன்னதாக நடிகை அதிதி ராவ் மற்றும் நடிகர் சித்தார்த் இருவரும் காதலிப்பதாக பல்வேறு ஊடகங்களில் தகவல் வெளியாகி வந்தன.
ஆனால், இதை இரு தரப்பினரும் ஆரம்ப காலகட்டத்தில் மறுத்தாலும் அதன் பின் இந்த செய்திகள் குறித்து எந்த மறுப்பு தகவலும் கொடுக்கவில்லை. ஆனால், அந்த தகவலை உறுதிப்படுத்துவது போல் அடிக்கடி பல இடங்களில் ஒன்றாக தோன்றுகின்றனர்.
ஒவ்வொரு முறையும் அவர்கள் ஒன்றாக ஏதாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அவர்களது காதல் விஷயம் குறித்து திரையுலகில் பரபரப்பாக பேசப்படும் அந்த வகையில் இன்று பிரபல நடிகர் ஷர்வானந்தின் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிச்சயதார்த்த விழாவில் அதிதி ராவும் நடிகர் சித்தார்த்தும் ஒன்றாக வந்து கலந்து கொண்டனர். அவர்களுடைய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
English Summary
Adidhi rai With actor sithardh in actor marriage