கைதி பட நடிகருடன் இணையும் அதிதி ஷங்கர் - வெளியானது மாஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்திலும் நடித்தார்.

தற்போது அதிதி ஷங்கர் அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அதிதி ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், இந்தப் படத்தை "குட் நைட்" மற்றும் "லவ்வர்" படங்களை தயாரித்த மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aditi shankar next movie update


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->