விடுதலை 2: முக்கிய வசனங்களுக்கு ஆப்பு வைத்த சென்சார் போர்டு! கொந்தளிக்கும் விசிக! - Seithipunal
Seithipunal


விடுதலை 2 படத்தில் வன்முறையை தூண்டும் வகையில் இருந்த வசங்களை மாற்றி அமைக்க சென்சார் போர்டு அறிவுறுத்திய நிலையில், இதற்க்கு விசிக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சமூக அக்கறையுள்ள இயக்குனர் திரு.வெற்றிமாறன் அவர்களின் விடுதலை இரண்டாம் பாகம் வரும் திசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், அந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது.

படத்தில் வசைச் சொற்கள் வரும் இடத்தில் ஒலியை நிறுத்த சொன்ன சென்சார் போர்டு, சில அரசியல் சொற்களையும் அந்த பட்டியலில் சேர்த்துள்ளது. 

குறிப்பாக, ‘அரசு’’அரசாங்கம்', 'தேசிய இன விடுதலை' ஆகிய இடங்களில் ஒலியை நிறுத்தவோ அல்லது மாற்றவோ அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது.

'பிரச்சனையை தீர்க்குறதுக்கான ஆயுதங்களை மக்களே அந்தந்த போராட்ட களங்களிலிருந்து உருவாக்கிக்கனும்' என்று படத்தில் உள்ள வசனத்தை 'அந்த ஆயுதம் ஓட்டாக கூட இருக்கலாம்' என்று திருத்தும்படி சொல்லியுள்ளது சென்சார். ஆபாசம்,பிற்போக்குத்தனம்,

சனாதனப்பரப்புரை என திரையை அழுக்காக்கி, சமூகத்தையும் பின்னோக்கி இழுக்கும் சூழலில், சமூகத்தையும் இளைஞர்களையும்  சமூகநீதி பாதைக்கு அழைத்துச்செல்லும் சமூக பொறுப்போடு களமாடி வருபவர் திரு.வெற்றிமாறன் அவர்கள். விடுதலை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிக்கொண்டிருக்கும் சூழலில்,தணிக்கை குழுவினரின் இந்த போக்கு படைப்பிலக்கியவாதிகளின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாகும்.

தணிக்கை குழு படைப்பாளிகளின் கருத்துச்சுதந்திரத்துக்கு இனி மதிப்பளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viduthalai 2 Sensor Board VCK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->