விடா முயற்சி படத்தின் அடுத்த அப்டேட் - என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. 
 
இதில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. 

இதற்கிடையே இந்தப் படத்தின் அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது. அதன் படி சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. அதில், எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு.... என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. 

இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next update from vidamuyarchi movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->