100-வது படம் - சாதனை பயணத்திற்கு வாய்பளித்தவர்களுக்கு நன்றி - ஜி.வி பிரகாஷ்.!
gv prakash thanks to producers and directors for 100 movie
தமிழ் சினிமாவில் இசை மற்றும் நடிப்பு என்று இரண்டு துறையிலும் பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிகராக தமிழில் இடிமுழக்கம், 13, கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
மேலும் இசையமைப்பாளராக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வணங்கான், வீர தீர சூரன், இட்லி கடை மற்றும் எஸ்.கே.25 என்று ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்துள்ளார்.
இந்த பட்டியலில் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் எஸ்.கே.25 ஆகும். இந்தப் படத்தை 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார். இதில், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் இந்த சாதனைப் பயணத்திற்கு வாய்ப்பளித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்று அனைவருக்கும் நன்றி" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
gv prakash thanks to producers and directors for 100 movie