உழைப்பால் உயர்ந்த அஜித் குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்-ஓபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


உழைக்கும் மக்களின் உயர்வை போற்றும் வகையில் இன்று உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் தனது திறமையாலும், விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளும் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

 இந்த நிலையில் இவருடைய பிறந்த நாளையொட்டி அரசியல் பிரமுகர்கள் திரை பிரபலங்கள் ரசிகர்கள் உட்பட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித் குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK O panneerselvam wish to Ajith Kumar birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->