அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் புதிய போஸ்டர் வைரல்.! - Seithipunal
Seithipunal


ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகின்ற திரைப்படங்களாக தேடி தேடி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகின்றார். மிகவும் பிஸி நடிகையாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான வாழ்வை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். திரில்லர் படமாக உருவாகும் இந்த திரைப்படத்தை தினேஷ் லட்சுமணன் இயக்குகிறார். இதில் டீச்சராக ஐஸ்வர்யா ராஜேஷும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுனும் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்தகைய நிலையில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aishwarya rajesh Arjun Movie poster viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->