துப்பாக்கி சுடுதலில் அஜித் வென்ற பதக்கங்கள் எத்தனை தெரியுமா.? அவரே வெளியிட்ட தகவல்.!
Ajith gun shoot medals
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஹச்.வினோத் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது தல அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வீடியோ, ஃபர்ஸ்ட் சிங்கிள், சண்டைக் காட்சி மேக்கிங் வீடியோ மற்றும் தீம் மியூசிக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதன்படி, தற்போது இவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வென்ற பதக்கங்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.