அடக்க முடியாத கண்ணீருடன் வணங்குகிறேன், சென்று வாருங்கள் - அடக்கமுடியாத சோகத்தில் தங்கர்பச்சான்! - Seithipunal
Seithipunal



பிரபல பின்னணி பாடகர் மறைவுக்கு இயக்குநர் தங்கர்பச்சான் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "ஜெயச்சந்திரன்" என்றும் வாழ்வார்!

மக்களின் கணக்கில் வராமலேயே வாழ்ந்து மறையும் பேராளுமைகள் ஏராளம்!  அவற்றுள் மிக முக்கியமானவர் திரைப்பாடகர் ஜெயச்சந்திரன் அவர்கள். 

எம்.எஸ்.வி மணிப்பயல் (1973) படத்தில் "தங்கச் சிமிழ் போல் இதழோ" பாடல் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.
டிஎம்எஸ் யேசுதாஸ் எஸ்பிபி வரிசையில் ஜெயச்சந்திரன் அவர்கள் என்றும் நிலைத்திருப்பார்! அவர் பாடிய 95% தமிழ் பாடல்கள் என்னிடம் உள்ளன. 

மனித உணர்வின் அனைத்து நிலைகளுக்கும் அவரது குரல் மிகப் பொருத்தமாக அமைந்தது. 
அலைகள் திரைப்படத்தின் "பொன்னென்ன பூவென்ன கண்ணே" பாடல் தொடங்கி அவர் பாடிய பாடல்களில் உள்ள குழைவுத்தன்மை நம்மை கட்டிப்போட்டு விடும்! 

ஒவ்வொரு பெருங்கலைஞர்களாக மறைந்து வரும் காலமாக மாறி வருவது பெரும் வருத்தத்துக்குரியதாக உள்ளது. உங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் என்றும் மரணம் இல்லை ஐயா! எங்களோடு வாழ்ந்து கொண்டே இருக்கிறீர்கள்! 

நீங்கள் அளித்த அனைத்து படைப்புகளுக்காகவும் அடக்க முடியாத கண்ணீருடன் வணங்குகிறேன்! சென்று வாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Thangar pachan condolence to Jayachandran


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->