திரு.கார்ல் லின்னேயஸ் அவர்கள் நினைவு தினம்!
Remembrance Day of Mr. Carl Linnaeus!
'நவீன வகைப்பாட்டியலின் தந்தை' திரு.கார்ல் லின்னேயஸ் அவர்கள் நினைவு தினம் இன்று! இவர் அனைத்து தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, அனைத்திற்கும் பொருத்தமாக பெயர் சூட்டினார்.
நவீன வகைப்பாட்டியலின் தந்தை, கார்ல் லின்னேயஸ் 1707ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி ஸ்வீடனின் ராஷல்ட் கிராமத்தில் பிறந்தார்.இவர் படிப்பை முடித்துவிட்டு ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். அதன்பிறகு தாவரங்கள், பறவைகள் மட்டுமல்லாமல் புவியியல் குறித்தும் ஆராய்ந்து ஏராளமான குறிப்புகளை எழுதினார்.
புதுவகை தாவரங்களை கண்டறிந்து ஃப்ளோரோ லேப்போனிகா என்ற நூலை எழுதினார். இவரது இயற்கையின் அமைப்பு (Systema Naturae) நூல் 1735-ல் வெளிவந்து, தாவரவியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 1753-ல் இயற்கை அறிவியல் களத்தில் மாஸ்டர் பீஸ் எனக் குறிப்பிடப்பட்ட தி ஸ்பீசிஸ் ஆப் பிளான்ட்ஸ் நூலில் அனைத்து தாவரங்களையும் வரிசைப்படுத்தி, வகைப்படுத்தி, அனைத்திற்கும் பொருத்தமாக பெயர் சூட்டினார்.
தற்கால சூழலியலின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் கார்ல் லின்னேயஸ் 70வது வயதில் ஜனவரி 10 ஆம் தேதி 1778 அன்று மறைந்தா
English Summary
Remembrance Day of Mr. Carl Linnaeus!