வெனிசுலா அதிபராக இன்று பதவியேற்கிறார் மதுரோ: மல்லுக்கட்டும் எதிர்க்கட்சி! - Seithipunal
Seithipunal


பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், தேர்தல் ஆணையத்தால் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நிகோலஸ் மதுரோ இன்று பதவியேற்க உள்ளார். இது ஒருபுறமிருக்க, எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கான்சலசும், நாடு திரும்பி பதவியேற்க தீர்மானித்துள்ளார் என கூறப்படுகிறது . அவர் நாடு திரும்பினால் அவரை கைது செய்ய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. 'நான்தான் வெற்றி பெற்றேன்' என எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கான்சலஸ் திட்டவட்டமாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் வாக்குப்பதிவு முடிந்த சில மணிநேரங்களுக்கு பிறகு மதுரோவை வெற்றியாளராக அறிவித்தது தேசிய தேர்தல் கவுன்சில். இருப்பினும், முந்தைய தேர்தல்களைப் போலல்லாமல், தேர்தல் அதிகாரிகள் விரிவான தேர்தல் முடிவுகளை வழங்கவில்லை என கூறி இதனை எதிர்க்கட்சி ஏற்கவில்லை.

இதையடுத்து தேர்தலுக்குப் பின்னர், மதுரோவின் வெற்றியை ஏற்க மறுத்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தது.இதில்  நூற்றுக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர்.மேலும் தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஆஸ்திரேலியா முதல் ஸ்பெயின் வரையிலும், பிரிட்டன், கனடா, கொலம்பியா, மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினாவிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

நாட்டின் அமைதியற்ற சூழல் நிலவியதால், கிளர்ச்சியை தூண்டியதாக எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கான்சலசை கைது செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டதையடுத்து அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்ற கான்சலஸ், ஸ்பெயினில் அரசியல் தஞ்சம் புகுந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், தேர்தல் ஆணையத்தால் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நிகோலஸ் மதுரோ இன்று பதவியேற்க உள்ளார். இது ஒருபுறமிருக்க, எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கான்சலசும், நாடு திரும்பி பதவியேற்க தீர்மானித்துள்ளார் என கூறப்படுகிறது . அவர் நாடு திரும்பினால் அவரை கைது செய்ய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். சிறிது நேரம் கழித்து அவர் விடுவிக்கப்பட்டார்.அதிபர் பதவியை கைப்பற்றுவதற்காக இரு தலைவர்களிடையே நடக்கும் அதிகாரப் போட்டியால் பதற்றம் போராட்டம் மற்றும் வன்முறை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maduro to be sworn in as Venezuelas president today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->