"திரைத்துறையில் இருப்பவர்கள் என்ன பாவம் செய்தோம்" - விஜய் டிவி நடிகை காட்டம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மற்றும் சென்னை போன்ற பல முக்கிய நகரங்களில் 'லிட்டில் வீ' என்ற பெயரில் பல் மருத்துவமனை இயங்கி வருகிறது.

தற்போது அதன் புதிய கிளை ஒன்று கரூர்-கோவை சாலையில் துவக்கப்பட்ட நிலையில், மருத்துவர் ஷீஃபா தலைமையில் மருத்துவமனை நடைபெற இருக்கிறது.

இந்த மருத்துவமனையின் துவக்க விழாவில் பிரபல தொலைக்காட்சியின் ராஜாராணி சீரியலில் நடிகையாக இருந்த ஆலியா மானசா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'தடுப்பு குழந்தை பல் மருத்துவம்' மிகவும் சிறப்பான நிலையை எட்டும் என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஆலியாவிடம் நடிகர் பயில்வான் ரங்கநாதன் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் குறித்து சர்ச்சையாக பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு ஆலியா மானசா திரைத்துறையில் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களது தனிப்பட்ட விஷயங்களை வெளியில் கொண்டு வருவதாக நினைத்து மோசமான கருத்துக்களை கூறுவது மிகவும் தவறு. திரைத் துறையில் இருப்பவர்கள் என்ன பாவம் செய்தோம்.

நாங்களும் மனிதர்கள்தானே என்றும், எங்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளது. நடிகர் பயில்வான் ரங்கநாதன் அவ்வாறு பேசுவது மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alya manasa speech about bayilvan renganathan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->