ஜாவா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!    - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது, பலர் காயம் அடைந்துள்ளனர். 

இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. அப்போது இந்த வெள்ள பெருக்கில் சிக்கி  19 பேர் பரிதாபமாக பலியாகி இருந்தனர்.இதில் பலர் காணாமல் போனர்,

இந்நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது, பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும் மேற்கு ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் 9 கிராமங்கள் கடுமையாக நாசமாகின. ஜாவாவில் தொடர் மழையால் மலையோர கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால் பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Java landslide Death toll rises to 25   


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->