புலிக்கு இரையான பெண்.. வயநாட்டில் மீண்டும் ஒரு சோகம்..!  - Seithipunal
Seithipunal


கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் காபி தோட்டத்தில் பெண் தொழிலாளியை புலி ஒன்று தாக்கி கொன்றுள்ளது. புலி  தாக்கி உயிரிழந்தவர் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மின்னு மணியின் நெருங்கிய உறவினர் என தெரியவந்துள்ளது. 

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் மனந்தவாடி பகுதியருகே பஞ்சரகொல்லி என்ற இடத்தில் காபி தோட்டம் ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மின்னு மணியின் நெருங்கிய உறவினரான ராதா தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.

45 வயதான அந்த பெண் ராதா சம்பவத்தன்று காபி தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் அவருடைய உடல் இறந்தநிலையில் தோட்டத்தில் கிடந்துள்ளது. அவரை புலி ஒன்று தாக்கி கொன்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது .மேலும் ராதாவின்  உடலின் ஒரு பகுதியை புலி தின்றிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை வயநாட்டை சேர்ந்தவரான மின்னு மணி, அவருடைய சமூக ஊடக பதிவில், புலியை விரைவில் பிடித்து, உள்ளூர் மக்களுக்கு அமைதி தர வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

மேலும் இந்த சம்பவத்திற்கு வயநாடு தொகுதியின் எம்.பி.யான பிரியங்கா காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். இந்தநிலையில் நேற்று மாலையும் புலி அந்த வழியே சென்றது என கூறப்படுகிறது . இதனால், மக்களிடையே அச்சம் அதிகரித்து உள்ளது. மேலும் புலியை கூண்டு வைத்து பிடிக்கும் பணியை வன துறை தொடங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The woman who fell prey to the tiger Tragedy in Wayanad again


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->