காட்சி நீக்கம்! அமரன் படத்தால் தூக்கத்தை தொலைத்த மாணவருக்கு நல்லசெய்தி!
amaran Mobile Number issue chennai high court
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த "அமரன்" திரைப்படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இதற்கிடையே, இந்த படத்தில் தனது மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டதாக மாணவர் வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், ரூ.1.10 கோடி இழப்பீடு கோரியதுடன், மொபைல் எண் இடம்பெற்ற காட்சியை நீக்கவும் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கவும் கோரினார்.
இந்த விவகாரத்தில், ராஜ்கமல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து, அந்த காட்சி நீக்கப்பட்டதாக தெரிவித்தது.
English Summary
amaran Mobile Number issue chennai high court