அமரன் படம் ஒரு....நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடி விளக்கம்! - Seithipunal
Seithipunal


அமரன் படம் போரைப் பதிவு செய்யும் படம் அல்ல என்றும், ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையின் அனைத்து பக்கங்களையும் பதிவு செய்யும் படம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்' கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த படமானது மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற  திரைப்படத்தின் அறிமுக விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், அமரன் படம் போரைப் பதிவு செய்யும் படம் அல்ல என்றும், ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையின் அனைத்து பக்கங்களையும் பதிவு செய்யும் படம் என்று கூறினார்.

இதற்கிடையே, அண்மையில் இந்த படத்தில் இருந்து 'ஹே மின்னலே' பாடல் வெளியாகி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amaran movie is a actor sivakarthikeyan action description


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->