''அமரன்'' திரைப்படத்தின் நியூ போஸ்டர்!
Amaran movie new poster
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் தனது 21வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ''அமரன்'' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டீசர் நேற்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வி என்ற ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான நேற்று இந்த திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.