'அமரன்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட்! மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Amaran movie update
சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21 வது திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு ''அமரன்'' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மறைந்த ராணுவ வீரர் மிகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
பயங்கரவாதிகளை எதிர்த்து போராடி வீர மரணம் அடையும் ராணுவ வீரரின் கதையாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி குறித்து இன்று மாலை 5 மணிக்கு வெளியிட போவதாக தயாரிப்பு நிறுவனம் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பதிவால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.