துபாய் கார் ரேஸிங் பயிற்சி: நடிகர் அஜித் குமாரின் கார் விபத்து! வைரல் வீடியோ! - Seithipunal
Seithipunal


துபாய் கார் ரேஸிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கி உள்ளது. இதில் அவர் காயமின்றி தப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கார் மற்றும் பைக் பந்தயங்களில் ஆர்வமிக்கவரான நடிகர் அஜித், படப்பிடிப்பின் போதும் விபத்தில் சிக்கி பல அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டுள்ளார்.

இருப்பினும் அவர் தொடர்ந்து பைக், கார் ரேஸில் ஈடுபட்டுவருகிறார். மேலும், அஜித் "வீனஸ் மோட்டர்ஸ் டூர்ஸ்" எனும் இருசக்கர பயண நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.  

தற்போது "அஜித் குமார் ரேஸிங்" என்ற நிறுவனத்தின் மூலம் சர்வதேச அளவிலான கார் பந்தய வீரர்களை உருவாக்கும் முயற்சியில் அஜித் ஈடுபட்டுள்ளார்.  

இந்நிலையில், துபாயில் வருகிற 9ஆம் தேதி தொடங்கவுள்ள கார் பந்தயத்துக்கான தீவிரப் பயிற்சியின் போது, அவரது கார் ரேஸிங் டிராக்கின் மைய சுவரில் மோதியது. கார் சேதமடைந்தாலும், அஜித் எந்த காயமுமின்றி உயிர்தப்பினார். இதுகுறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Car Race Ajithkumar accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->