அமரன் போன் நம்பர் விவகாரம்: ரூ.1.10 கோடி இழப்பீடு..நீதிமன்றத்தில் மாணவர் வழக்கு - Seithipunal
Seithipunal


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவான "அமரன்" திரைப்படம், தீபாவளி வெளியீடாக வந்தது. இது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இப்படம் உலகளவில் ₹300 கோடி வசூலித்துள்ளது. அடுத்தகட்டமாக, இப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், படத்தில் தனது மொபைல் எண்ணை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, மாணவர் வாகீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், "திரைப்படத்தில் என் மொபைல் எண் பயன்படுத்தப்பட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக ₹1.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடையை விதிக்க வேண்டும்," என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த எண்ணை நீக்கவும், தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தயாரிப்பாளர்கள் இதுவரை அந்த தவறை திருத்தவில்லை என வாகீசன் கூறியுள்ளார். தற்போது இது பற்றிய முடிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கின் தீர்ப்பு, "அமரன்" திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டின் சாத்தியத்தை மிக முக்கியமாக பாதிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amaran phone number issue Rs1 crore 10 lakhs compensation Student case in court


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->