நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு என்ன ஆச்சு? தீவிர சிகிச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Actor power star Srinivasan hospitalized
பிரபல நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றிரவு திடீரென உடல்நிலை மோசமாகியதால், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தற்போது மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
English Summary
Actor power star Srinivasan hospitalized