புதுச்சேரியில் 17 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல் சென்னை - புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. இதேபோல், புதுச்சேரியில் எப்போதும் இல்லாத வகையில் 54 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. 

இதில் நகரம் உள்பட புறநகர் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகிறது. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், புதுச்சேரியில் நிவாரண முகாம்களாக செயல்படும் 17 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 school leave in puthuchery


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->