BMW பைக்கில் அசத்தலான ரைட்.! மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் சாகசம்.! - Seithipunal
Seithipunal


மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார்  என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் மஞ்சு வாரியர். இவர் மலையாள சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் பாடகராகவும் இருந்து வருபவர். தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படத்தில் தல அஜித் குமாருடன் நடித்திருந்தார். இந்தத் திரைப்படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

பைக் பிரியரான மஞ்சு வாரியர் துணிவு பட சூட்டிங்கின் போதே அஜித் குமாரின் அகில இந்திய சுற்றுப்பயண பைக் ரைடிங்கில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பைக்கில் மீது  அலாதி விருப்பம் கொண்ட மஞ்சு வாரியர் தற்போது புதிய பைக் ஒன்றை வாங்கி இருக்கிறார். இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.



மஞ்சு வாரியர் கடந்த பிப்ரவரி மாதம்  பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 1250 ஜி எஸ் என்ற சூப்பர் பைக் வாங்கியிருந்தார். தற்போது அந்த பைக்கில்  தனது நண்பரும் மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகருமான செளபின் சாகிருடன்  ரைட் சென்று இருக்கிறார். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

558.743,79.167 560.652,78.425 C562.623,77.658 564.297,76.634 565.965,74.965 C567.633,73.296 568.659,71.625 569.425,69.651 C570.167,67.743 570.674,65.562 570.82,62.369 C570.966,59.17 571,58.147 571,50 C571,41.851 570.966,40.831 570.82,37.631">

View this post on Instagram

A post shared by Manju Warrier (@manju.warrier)



தனது புதிய பிஎம்டபிள்யூ பைக்கில் நண்பர் மற்றும் மலையாள நடிகருமான செளபின் சாகிருடன் சீறிப்பாய்ந்து செல்லும் காட்சிகளை தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார் மஞ்சு வாரியர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி இருக்கிறது. ரசிகர்கள் பலரும் மஞ்சு வாரியரின்  சாகசத்தை  பிரிண்ட் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amazing Ride Manju Warrior Adventure on BMW Bike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->