மெரீனாவை பார்த்து மிரண்டு போன பசுமை தீர்ப்பாயம் - இனி லீவு கிடையாது..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து 15ஆம் தேதி மாட்டுப் பொங்கலும், 16ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட்டது. 

இதில், காணும் பொங்கலன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குவிந்ததால், கடற்கரை முழுவதும் குப்பை கூளமாக மாறியது. 

ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கலுக்கு பிறகு மெரினா கடற்கரை குப்பைகள் நிறைந்து காணப்படுவது வழக்கம். இதனை அப்புறப்படுத்த ஏராளமான துப்புரவு பணியாளர்கள் மெனக்கெடுகின்றனர். இந்தாண்டும் காணும் பொங்கலுக்கு மெரினாவில் அதிகளவு மக்கள் குவிந்தனர். 

இதனால், அடுத்த நாள் கடற்கரையே குப்பைக்கூளமாக காட்சியளித்தது. இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்திருப்பதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதாவது, காணும் பொங்கலன்று அளிக்கப்படும் அரசு விடுமுறையை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைப்போம் என்றும் காணும் பொங்கலன்று மெரினா குப்பை கூளமாக மாறுவதற்கு மக்கள்தான் காரணம் என்றும் அதனால் அன்றைய தினம் அரசு விடுமுறையை ரத்து செய்ய பரிந்துரைப்போம் என்றும் எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

green tribunal warning and asking no leave in kanum pongal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->