செல்லும் இடமெல்லாம் தமிழின் பெருமையை பறைசாற்றுகிறார் பிரதமர் மோடி - வானதி சீனிவாசன்.!
bjp mla vanathi seenivasan speech about modi promoting tamil cultural
தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் மிடுக்காக எடுத்துரைப்பதில் பிரதமர் மோடிக்கு நிகர் எவரும் இல்லை என்று பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:-
"கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்தில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, நமது மத்திய அரசு உதவியுடன் அமைக்கப்பட்ட கலாச்சார மையத்திற்கு தற்போது நமது மூத்த தமிழ்ப்பாவலர் திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டிருப்பது தமிழர்களுக்கு கிடைத்த மாபெரும் வரலாற்றுப் பெருமை.
தமிழர்களின் சிறப்பையும் தமிழினத்தின் வரலாற்றையும் உலக அரங்குகளில் மிடுக்காக எடுத்துரைப்பதில் நமது பிரதமருக்கு எவரும் நிகரில்லை என்பதை மீண்டுமொருமுறை உணர்த்தும் இந்த நிகழ்வு எல்லையில்லா மன மகிழ்வை நமக்கு அள்ளித்தருகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல உலகெங்கும் "திருவள்ளுவர் கலாச்சார மையங்கள்" நிறுவுவதில் முனைப்பாக செயல்பட்டு வரும் நமது பிரதமர், நாடாளுமன்றத்தில் தமிழர் அடையாளச் சின்னமான செங்கோலை நிறுவுவது, உலக மேடைகளில் பழம்பெரும் தமிழ் நூல்களை மேற்கோள் காட்டுவது, உலகப் பொதுமறையாம் திருக்குறளை அயல்நாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பது என்று தொன்மை வாய்ந்த நமது தமிழ் மொழியின் பாரம்பரியத்தை போகுமிடமெல்லாம் பறைசாற்றி வருகிறார்.
இப்படி பரந்து விரிந்த நமது பாரதத்தின் அனைத்து மொழிகளையும் மாநிலங்களின் மேன்மைகளையும் கொண்டாடும் ஒருவரை, வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் ஒருவரை நாம் பிரதமராக பெற்றது நமது நல்வனைப் பேறு" என்றுத் தெரிவித்தார்.
English Summary
bjp mla vanathi seenivasan speech about modi promoting tamil cultural