இனி நடிக்கப் போவதில்லை.. ஆனால், அமீர்கான் வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


அமீர்கான் நடிப்பில் கடைசியாக லால் சிங் சத்தா திரைப்படம் வெளியாகியது. இதில் கரீனா கபூர் ஹீரோயினாக நடித்திருப்பார்  பான் இந்தியா திரைப்படமாக இது வெளியாகியது.

ஆனால், இந்த திரைப்படமானது பெருமளவில் வசூலிக்காமல் நஷ்டத்தை சந்தித்தது. அமீர்கானின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமீர்கான் அடுத்த படத்தின் பெயரை சாம்பியன்ஸ் என்று அறிவித்துள்ளார்.

அவர் நடிப்பிலிருந்து தற்காலிகமாக விலக இருப்பதாகவும், அதே மேடையில் அறிவித்தார். சாம்பியன் திரைப்படத்தை அமீர்கான் சார்பில் தயாரிக்கப் போவதாக கூறியுள்ளார். திரையுலகில் படம் நடிப்பதில் அவர் ஓய்வு எடுத்து விட்டு தனது குடும்பத்துடன் இருக்கப் போவதாக கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய போது நடிகர் அமீர்கான், "சாம்பியன்ஸ் திரைப்படம் அற்புதமான கதை. மனதை கவரும் விதமாக இந்த படம் இருக்கும். 

சில நாட்கள் நடிப்பில் இருந்து விலக எண்ணுகிறேன். எனது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னுடைய அம்மா மற்றும் என்னுடைய குழந்தைகளுடன் நேரத்தை விரயம் செய்ய ஆசைப்படுகிறேன். நான் சாம்பியன்ஸ் திரைப்படத்தை தயாரிப்பேன். படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். திடீரென்று பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amirkhan said about relive from cinema acting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->