கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் செல்ஃபி.. படக்குழுவிற்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு.!!
Anbumani Ramadoss Tweet for Selfie
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் பேச்சிலர், ஜெயில் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியானது.
இதையடுத்து, இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் செல்ஃபி. இத்திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிகில் திரைப்படத்தில் நடித்திருந்த வர்ஷா பொல்லம்மா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கலைப்புலி எஸ் தாணு தன்னுடைய வி கிரியேசன்ஸ் மூலம் தயாரித்துள்ளார். இதனிடையே செல்ஃபி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாமக இளைஞரணி தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் செல்ஃபி திரைப்படத்தின் முன்னேற்றத்தைப் பார்த்து படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நேற்று ‘செல்ஃபி’ படத்தின் முன்னோட்டத்தை பார்த்தேன். நீட் தொடர்பான மோசடிகள், தற்கொலைகள், கொலைகள் மற்றும் கட்டணம் ஆகியவற்றை அம்பலப்படுத்தும் துணிச்சலான படம். ஜி.வி.பிரகாஷ், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் புதுமுகம் குணநிதி கலக்கியிருக்கிறார்கள்.
நான் பார்த்த ஜி.வி.பிரகாஷின் சிறந்த படங்களில் ஒன்று. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் மதிமாறனுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
English Summary
Anbumani Ramadoss Tweet for Selfie