09 வது சாம்பியன்ஸ் கோப்பைக்கான தொடக்க விழா நடைபெறாது; ஐ.சி.சி. கூறும் காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் பிப்ரவரி 19-ம் தேதி முதல் மார்ச் 09-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

08 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில்  'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆக இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. 

இதனிடையே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியது.

மேலும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன்பாக 08 அணிகளின் கேப்டன்கள் வைத்து போட்டோவும் எடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தொடக்க விழா கிடையாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளன.

பாகிஸ்தானுக்கு வெவ்வேறு தேதிகளில் அணிகளின் வருகை காரணமாக தொடக்க விழா மற்றும் கேப்டனின் அதிகாரபூர்வ கூட்டம் நடத்த சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த திட்டம் கைவிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The opening ceremony for the 09th Champions Trophy will not be held


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->